×

மக்களவை தேர்தலில் போட்டியிட மாட்டேன்: முன்னாள் அமைச்சர் பரத்சிங் சோலங்கி அறிவிப்பு

அகமதாபாத்: மக்களவை தேர்தலில் போட்டியிட மாட்டேன் என காங்கிரஸ் மூத்த தலைவர் பரத்சிங் சோலங்கி அறிவித்து உள்ளார். குஜராத் முன்னாள் முதல்வர் மாதவ்சிங் சோலங்கியின் மகனான பரத்சிங் சோலங்கி(70), 2004, 2009 மக்களவை தேர்தல்களில் குஜராத்தின் ஆனந்த் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் ஒன்றிய மின்சாரம் மற்றும் ரயில்வேதுறை இணை அமைச்சராக பதவி வகித்து வந்த பரத்சிங் சோலங்கி, 2015 முதல் 2018 வரை குஜராத் காங்கிரஸ் பிரிவு தலைவராக பொறுப்பு வகித்து வந்தார்.

இந்நிலையில் நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் போட்டியிட போவதில்லை என பரத்சிங் சோலங்கி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தன் ட்விட்டர் பதிவில், “எனக்கும், என் குடும்பத்துக்கும் காங்கிரஸ் கட்சி நிறைய வாய்ப்புகளை தந்துள்ளது. வரவுள்ள தேர்தலில் ஜம்மு காஷ்மீர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளேன். இதை கருத்தில் கொண்டு வரும் தேர்தலில் நான் போட்டியிடவில்லை. மேலும் குஜராத்தில் காங்கிரஸ் கட்சிக்காக பிரசாரம் செய்ய உள்ளேன். ஆனால் வாழ்நாள் முழுவதும் காங்கிரஸ் தொண்டனாக இருக்க விரும்பும் நான் கட்சி மேலிடம் எடுக்கும் எந்தவொரு முடிவையும் ஏற்று கொள்வேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post மக்களவை தேர்தலில் போட்டியிட மாட்டேன்: முன்னாள் அமைச்சர் பரத்சிங் சோலங்கி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Lok Sabha ,Former minister ,Bharat Singh Solanki ,Ahmedabad ,Congress ,Gujarat ,chief minister ,Madhav Singh Solanki ,Anand ,
× RELATED மக்களவை தேர்தலை பார்க்க 23 நாடு பிரதிநிதிகள் வருகை